சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு. - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு.

Share This

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்த உடன் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளின் பிரகாரமே, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் நிர்வாகத்தினருக்கு கட்டாயம் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.*

கொவிட்−19 வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு, பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், பாடசாலையை மீள ஆரம்பிக்கின்றமை தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிக்கின்றார்.

Today's Exclusive News Tamil 

_______________________________________________________________________________

Advertisement



வயதெல்லைகளுக்கு தடை இல்லை ...உங்களிடம் காணப்படும் திறமைகளுக்கு களத்தை நாங்கள் உருவாக்கி தருகின்றாேம் ....மற்றும் ஊடகத்துறையில் திறமை இருந்தும் திறமையை வெளிப்படுத்த முடியாமல் இருக்கீன்றீர்களா? நாம் உங்களின் திறமைகளை உலகரியச் செய்வாேம் " எம்மாேடு இணைந்துக்காெள்ளுங்கள்...











No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages