உலக பெற்றோர்கள் தினம்.... - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

உலக பெற்றோர்கள் தினம்....

Share This

உலக பெற்றோர்கள் தினம்....

பெற்றோரை மதிப்போம்....

பேணி காப்போம்....


அன்னை தந்தையே 

அன்பின் எல்லை...


“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்ஆலயம் தொழுவது சாலவும் நன்று''என்ற வாக்கியத்திற்கு ஏற்ப ஒரு காலத்தில் நிஜ உலகின் கடவுளாக நம் பெற்றோரை வணங்கினோம். 

பெற்றோருக்கு அடுத்தபடியாகத் தான் தெய்வத்தை நினைக்கக் கூறியது இலக்கியங்களும் புராணங்களும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக தம் வாழ்நாளின் பெரும்பகுதியை பணத் தேடலாகவும் கடன் சுமைகளாகவும் மனவேதனைகளாகவும் உடல் நலக் குறைகளாகவும் கழித்தவர்கள். 

பிள்ளைகளுக்காக தன் கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்களும், கணவனை இழந்தவர்களும், வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். 

சிறுவயதிலேயே தன் மனைவியை இழந்து, மறுமணம் செய்யாமல் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய, தந்தைகளும் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

தாய் என்ற நிஜ கடவுள் “தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை ஆயிரம் உலகில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை''என, நுாற்றுக்கணக்கான பாடல் வரிகள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. 

ஓர் அன்னை தன் பிரசவ காலத்திலும், பிரசவித்த காலத்திலும் தன் உடல் நலத்தைவிட தன்னுள் ஜனித்த கருவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறாள். 

பத்து மாதங்களும் தனக்கு பிடித்த, பிடிக்காத உணவுகளை சாப்பிட்டு, துாக்கத்தில் புரண்டு படுக்க முடியாமல், மனதில் நல்லெண்ணங்களை வளர்த்து, கடவுள் நம்பிக்கையோடு தன் பிரசவ வலியையும் பொறுத்து, தன் வாழ்க்கையில் மறுஜென்மமாக அவதரித்து குழந்தையை பெற்றெடுக்கிறாள்.

2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் உலக பெற்றோர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இத்தினம் உலக பெற்றோர்களின் மகத்தான சேவையை பிள்ளைகள் பாராட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைவதுடன் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது.

பெற்றோர்- பிள்ளைகள்- நாட்டின் பிரதிநிதிகள்...

சிவில் சமூக அமைப்புக்கள் குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் நிலையை அடையாளங்கண்டு உணர்த்தும் வகையில் இத்தினம் பிரகனடப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...


"நீ தேடி சென்றாலும் விலகி செல்வது மற்றவர்கள்.

நீ விலகி சென்றாலும் உன்னை தேடி வருவது பெற்றவர்கள்."


Today's Exclusive News Tamil 



No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages