பயணக் கட்டுப்பாடு 14ஆம் திகதி வரை நீடிக்கப்படுமா -இராணுவத் தளபதியின் பதில் என்ன? - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

பயணக் கட்டுப்பாடு 14ஆம் திகதி வரை நீடிக்கப்படுமா -இராணுவத் தளபதியின் பதில் என்ன?

Share This

பயணக் கட்டுப்பாடு 14ஆம் திகதி வரை நீடிக்கப்படுமா -இராணுவத் தளபதியின் பதில் என்ன?  


நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மறுத்துள்ளார்.

அத்துடன், அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் அரசாங்கத்தினால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கம் பயணத் தடையை நீடிக்க தீர்மானித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் தற்போது பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்காக கடந்த 25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதுடன், அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Today's Exclusive News Tamil 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages