சுமந்திரன் - மணிவண்ணன் இடையில் இரகசிய சந்திப்பு! தமிழரசுக்கு அம்போ - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

சுமந்திரன் - மணிவண்ணன் இடையில் இரகசிய சந்திப்பு! தமிழரசுக்கு அம்போ

Share This

 நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ் நகர மேயர் மணிவண்ணன் ஆகியோருக்கு இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பு நேற்று மாலை 6 மணி முதல் நல்லிரவையும் தாண்டி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் புனித ஜோன் பாடசாலைக்கு முன்னால் இருக்கும் தென்னிந்திய திருச்சபையில் ஆயல் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. எனினும், புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது குறித்து பேசியிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

இருப்பினும், அதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது, வடக்கு மாகாணத்தில் அண்மை காலங்களில் அரசியல் ரீதியான பிரச்சினைகள், மற்றும் உள்கட்சி மோதல்கள் தலைதூக்கியுள்ளன.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் உள் கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. பங்காளி கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

குறிப்பாக சுமந்திரன் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் மற்றும் உட்கட்சிக்குள் கருத்து முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.

யாழ் மேயர் மணிவண்ணனும் தமது கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

தான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே குறித்த இருவருக்கும் இடையில் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனிக் கட்சியாக பதிவு செய்வதில் குறித்த ஒருவர் தீவிரமாக ஈடுபடுவதுடன் அதற்கு அதரவாக தமிழரசுக் கட்சியின் ஒப்புதல் மிகப் பிரதானமாக அமைவதனால் தற்போதைய தற்காலிக பொதுச் செயலாளர் குறித்த நபரின் நம்பிக்கைக்கு உரியர் என்பதால் அவர் ஊடாக அந்தக் கடிதத்தை பெற்று TELOவின் செயலாளர் நாயகத்தை சுமந்திரன் தன் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகவுவும், PLOTE தலைவர் சுமந்திரனின் கருத்தை ஏற்பார் என்பதாலும் இன் நிலைப்பாடு திரைமறைவில் அரங்கேறுவதாக கூறப்படுகிறது.

சம்பந்தன் இல்லாத சூழலில் சுமந்திரன் தனிமையாக்கப் படுவார் என்பதை உணர்ந்ததால் இன் நிலைப்பாடு முன்னெடுக்கப் படுவதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய சின்னத்தில் பதிவு செய்யப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதிக் கட்டத்தை அடைந்தள்ளமை குறிப்பிடத் தக்கது.

தமிழரசுக் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர், கட்சின் தலைவரிற்கு ஆதரவு போன்று தன்னைக் காட்டிக் கொண்டாலும் அவரை முழுவதுமாக இயக்குபவர் வேறு ஒருவர் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages