இலங்கைக்கு அடுத்த இரண்டு வாரத்தில் 6 லட்சம் ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசி கிடைக்கும் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

இலங்கைக்கு அடுத்த இரண்டு வாரத்தில் 6 லட்சம் ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசி கிடைக்கும்

Share This

 இலங்கைக்கு இன்னும் இரண்டு வாரத்தில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் 6 லட்சம் டோஸ்கள் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் 600,000 டோஸ் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஸ்பூட்னிக் வி தடுப்பூசி மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய தடுப்பூசி என கூறினார்.

இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 15 ஆயிரம் தடுப்பூசிகளில் 11,334 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், குறித்த அறிக்கைகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் என்றும் கூறினார். இதனை அடுத்து இரண்டு வாரங்களில் மேலும் 600,000 டோஸ் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிங்களை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages