இலங்கையில் மேலும் பல பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!
நாட்டில் மேலும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொல்லமுன கிராம சேவகர் பிரிவு மற்றும் மாபே மேற்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலபிட்டிவல நவ மஹர கிராமம் மற்றும் மகுல் பொகுன கிராமத்தின் மகுல் பொகுன் வீதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் இமதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் அடநிகித கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சன்னஸ்கம கிராம சேவகர் பிரிவு, தொம்பகஸ்வின்ன கிராம சேவகர் பிரிவு, கொடகம கிராம சேவகர் பிரிவு மற்றும் கஹவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டங்கே கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியவெவ நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபொத்த கிராம சேவகர் பிரிவு, கெந்தாவ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலுஹக்கல மற்றும் பொல்ஹேன ஆகிய கிராம சேவகர் பிாிவுகளும், களுத்துறை தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம சேவகர் பிாிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
Today's Exclusive News Tamil

No comments:
Post a Comment