கொழும்பு வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத 20 சடலங்கள் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

கொழும்பு வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத 20 சடலங்கள்

Share This

 கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் 3 மாதங்களாக அடையாளம் காணப்படாத உரிமையாளர்கள் அற்ற 20 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த சடலங்களில் அதிகமானவை ஆண்களுடையதெனவும் ஒரு பெண்ணுடைய சடலமும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அங்குள்ள சடலங்களை அடையாளம் காண பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளர்களை அடையாளம் கண்ட பின்னர் சடலங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

சடலங்களை அடையாளம் காண முடியாமல் போனால் அரசாங்க செலவில் அதனை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages