பட்டம் விடும் போது கூரை உடைந்து விழுந்ததில் சிறுவன் உட்பட மூவர் மரணம்! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

பட்டம் விடும் போது கூரை உடைந்து விழுந்ததில் சிறுவன் உட்பட மூவர் மரணம்!

Share This

 காலி − மக்குலுவ பகுதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றின் மேல் கூரையில் ஏறி பட்டம் விட முயற்சித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வீட்டின் கூரை உடைந்து வீழ்ந்ததில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது 46 வயதுடைய வீட்டு உரிமையாளர் அவரது மகனான 6 வயது சிறுவன் மற்றும் அயல்வீட்டுக்காரரான 44 வயதுடையவரே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages