முல்லைத்தீவில் கொரோனா கொத்தணி- சற்று முன்னர் சுகாதார பிரிவினர் மக்களிடம் அவசர கோரிக்கை! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

முல்லைத்தீவில் கொரோனா கொத்தணி- சற்று முன்னர் சுகாதார பிரிவினர் மக்களிடம் அவசர கோரிக்கை!

Share This

 முல்லைத்தீவு மாவட்ட கொவிட் 19 நிலமைகள் தொடர்பில் மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையினர் ஊடக சந்திப்பு ஒன்றினை சற்று முன்னர் நடத்தியுள்ளனர்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட தொற்று நோய்த்தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் வி.விஜிதரன் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட கொத்தணியுடன் இன்று நண்பகல் 12 மணிவரையான முடிவுகளின் படி 131 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.     

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன் முறையாக பெருமளவாக இனம்காணப்பட்ட தொற்றாளாகளாக இது காணப்படுகின்றது. ஆகவே மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவித்துள்ளார்.

வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளது. இது முற்றாக எந்த பக்த்தர்களும் அனுமதிக்கப்படாமல் சிறிய நிகழ்வாகவே நடைபெறும். மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு அறிவித்துள்ளார்கள் அத்தோடு மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages