கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றவர்கள் வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெறுவதற்கு அல்லது தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கின்ற எந்த தீர்மானமும் அரசாங்கம் எடுக்கவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நோயாளர் கட்டில்களை வழங்குவது கொரோனா தொற்றுக்கான நிரந்தர தீர்வாக அமையாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் நோய் அறிகுறிகள் எவையும் வெளிகாட்டப்படாத நோயாளர்கள் எதிர்வரும் இன்று திங்கட்கிழமை முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவ்வாறு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் விசேட மருத்துவ குழாமினால் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:
Post a Comment