மடுக்கரை கிராம மக்கள் சாள்ஸ் நிர்மலநாதனிடம் விடுத்துள்ள கோரிக்கை! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

மடுக்கரை கிராம மக்கள் சாள்ஸ் நிர்மலநாதனிடம் விடுத்துள்ள கோரிக்கை!

Share This

 நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் காணியில் வீடு கட்டிடங்கள் தவிர்ந்த பயன் படுத்தப்படாமல் இருக்கும் கால் ஏக்கர் அல்லது அரை ஏக்கர்; காணியில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ள அனுமதியைப் பெற்றுத் தர வேண்டும் என பாதீக்கப்பட்ட மக்கள் நேற்று வியாழக்கிழமை (13) காலை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடுக்கரை கிராமத்திற்கு நேற்று வியாழக்கிழமை (13) காலை திடீர் விஜயம் மேற்கொண்டு மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் குறித்த கோரிக்கையை முன் வைத்தனர்.   

குறித்த விடையம் தொடர்பாக விவசாயிகள் மேலும் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கையில்,,

நாங்கள் பாரிய அளவில் விவசாயம் செய்யவில்லை. எங்களிடம் உள்ள அரை ஏக்கர் மற்றும் கால் ஏக்கர் காணியில் எங்களுடைய உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக மட்டுமே நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ள தீர்மானித்தோம்.

இந்த பயிர்களுக்கான தண்ணீர் கூட எமக்கு கிடைப்பதில்லை. மழை மற்றும் ஆற்றில் இருந்து நீரைப் பெற்றுக் கொள்கின்றோம்.

இந்த நிலையில் மன்னார் கமநல அபிவிருத்தி திணைக்களம் இதற்கு தடை விதித்துள்ளது.   

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages