வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் 12 பொலிஸாருக்கு கோவிட் தொற்று - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் 12 பொலிஸாருக்கு கோவிட் தொற்று

Share This

 மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 12 பொலிஸாருக்கு கோவிட் தொற்று உறுதியையடுத்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாகப் பூட்டப்பட்டுள்ளதுடன், 32 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் 37 பொலிஸாருக்கு இன்று (12) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் 50 பொலிஸார் கடமையாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அன்டிஜன் பரிசோதனையில் அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று பொலிஸ் நிலையத்தில் 34 பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒரு சப் இன்பெக்டர், ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 12 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 32 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நிலையம் தற்காலிகமாகப் பூட்டப்பட்டுள்ளது.

வவுணதீவு பொதுமக்கள் தமது பொலிஸ் சேவையைத் தற்காலிகமாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வுவுணதீவு பொலிஸ் நிலையத்திற்குக் கிருமிநாசினிகளைத் தெளித்துச் சுத்தப்படுத்திய பின்னர் பொலிஸ் நிலையத்தைத் திறப்பதற்கான முழு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages