கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி கம்பஹா மாவட்டத்தில் பலுகஹாவெல கிராம சேவகர் பிரிவும், காலி மாவட்டத்தில் கரதுன்கொட, கொவியபான, கஹவன்னாகம, தொம்மன்கொட , லுனுமோதர, பொனவிஸ்டா, கட்டுகுருன்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், இரத்தினப்புரி மாவட்டத்தின் தெனவக பாதகட மற்றும் திப்பிடிகல கிராம சேவகர் பிரிவகளும், குருவிட்ட பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட குருவிட்ட கிராம சேவகர் பிரிவும், தெல்கமுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நகரப்பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


No comments:
Post a Comment