இலங்கைக்கு உதவுங்கள்! பிரிட்டனிடம் சஜித் கோரிக்கை - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

இலங்கைக்கு உதவுங்கள்! பிரிட்டனிடம் சஜித் கோரிக்கை

Share This

 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவியை வழங்குமாறு பிரிட்டன் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போதே எதிர் கட்சி தலைவர் இக்கோரிக்கையினை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த சில நாட்களாக வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களைச் சந்தித்து உதவிகளைக் கோரி வருகின்றார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பதில் பிரதிநிதி மருத்துவர் ஒலிவியா நிவேராஸ், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கினொன் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோருடனும் சஜித் பிரேமதாஸ சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages