இனி மேல் மாகாணத்திற்கு வெளியிலும் தடுப்பூசிகள் வழங்கப்படும் - பவித்ரா - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

இனி மேல் மாகாணத்திற்கு வெளியிலும் தடுப்பூசிகள் வழங்கப்படும் - பவித்ரா

Share This

 மேல் மாகாணத்திற்கு அடுத்தப்படியாக, கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது மேல் மாகாணத்தில் மாத்திரம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், மேல் மாகாணத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாடு பூராகவும் உள்ள 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட 2.3 மில்லியன் மக்கள் உள்ளதாகவும், 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 5.3 மில்லியன் மக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 3.3 மில்லியன் மக்கள் உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவிக்கின்றார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages