மரணச் சடங்கு வீட்டில் திருடர்கள் கைவரிசை!! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

மரணச் சடங்கு வீட்டில் திருடர்கள் கைவரிசை!!

Share This

 தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் மரணச் சடங்கு வீட்டில் பணம், நகை என்பன கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி, மரணச்சடங்கில் உறவினர் போல பாசாங்கு காட்டி கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் வீட்டில் உள்ள அலுமாரியினை திறந்து அதிலிருந்த ஜந்து லட்சம் பணமும் ஒரு பவுன் தங்க நகையினையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மரணச்சடங்கு முடிவுற்றபின் வீட்டு அலுமாரியினை திறந்தபோது பணம், நகை இல்லாததை உணர்ந்தவர்கள் அவற்றை தேடியபோதும் கிடைக்கவில்லை.

பின்னர் சந்தேகம் கொண்டு தருமபுரம் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார் கண்காணிப்பு கமரா மூலம் திருடர்களை இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கின்சிலி கேரத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages