உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
புகை பிடிப்பவர்களுக்கு, கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் இறப்பும் 50 சதவீதமான அளவுக்கு கூடுதலாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை பணிப்பாளர் டெட்ரோஸ் அதாநாம் கெப்ரிசியஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புகைப்பதை விடுவோம் என்ற WHO பிரச்சாரத்தை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில், புகை பிடிப்பவர்களுக்கு, கொரோனாவால் புற்றுநோய், இதய நோய் மற்றும் சுவாச நோய்கள் அதிக அளவில் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கொரோனா ஆபத்தை குறைக்கவும், இந்த நோய்களில் இருந்து விடுபடவும் புகைபிடிப்பதை கைவிடுவதே ஒரே வழி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகை பிடிப்பதை கைவிடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் பிரச்சார இயக்கத்தில் சேர்ந்து பங்களிக்குமாறு அவர் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
Today's Exclusive News Tamil


No comments:
Post a Comment