உயிர்த்தஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை உறுதிப்படுத்திய அமெரிக்க புலனாய்வு நிறுவனம் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

உயிர்த்தஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை உறுதிப்படுத்திய அமெரிக்க புலனாய்வு நிறுவனம்

Share This

 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நவுபர் மவுலவி என்பதை அமெரிக்காவின் எப்பிஐ நிறுவனமும் உறுதி செய்துள்ளதாகவும் தாக்குதல் தொடர்பில் வௌிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நான்கு மாலைதீவு பிரஜைகள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (19) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஞாயிறு தாக்குதல் குறித்து 32 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் விசாரணை மற்றும் அமெரிக்க விசாரணை ஊடாகவும் பிரதான சூத்திரதாரி நவுபர் மவுலவி என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஐஎஸ் கொள்கைகளை பரப்புதல், பயிற்சி வழங்குதல், நுவரெலியா, ஹம்பாந்தோட்டை பயிற்சி நிலையங்களை கண்காணித்தல் போன்றவற்றை நவுபர் மவுலவி​ மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் இந்த தாக்குதலில் பின்னணியில் சூழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages