மக்களை அடகுவைக்கிறார் அமைச்சர் டக்ளஸ் - சிறீதரன் குற்றச்சாட்டு - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

மக்களை அடகுவைக்கிறார் அமைச்சர் டக்ளஸ் - சிறீதரன் குற்றச்சாட்டு

Share This

 கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய சுய நலத்திற்காக வலைப்பாடு கிராமத்திற்கு அருகில் இருக்கும் எருமை தீவு பகுதி மக்களை அடகு வைக்க முனைகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வலைப்பாடு பகுதில் வசிக்கும் கடலட்டை மற்றும் கடற்தாவர பண்ணைகளை நடாத்தும் மீனவர்களின பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இதன்போது - வலைப்பாடு கிராமத்திற்கு அருகில் இருக்கும் எருமை தீவு பகுதியில் கடற்தாவர மற்றும் கடலட்டை பண்ணை வளர்ப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு இடையூறாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அத்துமீறி மீன்பிடியை புகுத்தி தனக்கு இசைவானவர்களுக்கு அந்த வாழ்வாதவரத்தை வழங்கும் வகையில் செயற்படுவதாக மீனவர்கள் முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

அதன் பின் எருமை தீவில் காணப்படும் கடலட்டை மற்றும் கடற்தாவர பண்ணையினை பார்வையிட்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், குறித்த மீனவர்கள் இலங்கை அரசின் உடைய 2010 ஆண்டு வர்த்தமானியின் அறிவித்தலின் பிரகாரத்தின் படியே பாசி கடற் தாவரங்கள் வளருகின்றன இடமாக குறிக்கப்பட்ட இந்த இடத்தில் கம்பி வலை பாய்த்து மீன்பிடியில் ஈடுபடக்கூடாது என பட்ட வரையறுக்கப்பட்ட இடத்தில் அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு அமைவாக 100 மேற்பட்ட அட்டை பணியாளரகளையும் அட்டை பண்ணைகளையும் 40க்கு மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாசி பண்ணைகளையும் நடத்தி வருகின்றனர்.

இவர்களது தொழிலிற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும்  - மீன்பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய சுய நலத்திற்காக இந்த மக்களை அடகு வைக்க முனைகிறார் என அவர் சாடியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages