கொரோனா அச்சம்; வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

கொரோனா அச்சம்; வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு

Share This

மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸார் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வவுணதீவு பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா சந்தேகத்தின்பேரில் 32 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று, 37 பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வுவுணதீவு பொலிஸ் நிலையத்தினை தொற்று நீக்கியதன் பின்னர் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வவுணதீவு பொதுமக்கள், தங்களுக்கான பொலிஸ் சேவையினை தற்காலிகமாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages