தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை! அஜித் ரோஹன தகவல் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை! அஜித் ரோஹன தகவல்

Share This

 கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற சுற்று வட்ட பகுதியில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்தப்பட்டது என நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய அந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்தப்பட்டுள்ளதாக வெலிகடை பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பீ. அறிக்கையில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages