நெருக்கடியான நிலை நீடித்தால் பயணத் தடை நீடிக்கும் - ஜனாதிபதி கோட்டபாய பணிப்புரை - சவேந்திர சில்வா தகவல் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

நெருக்கடியான நிலை நீடித்தால் பயணத் தடை நீடிக்கும் - ஜனாதிபதி கோட்டபாய பணிப்புரை - சவேந்திர சில்வா தகவல்

Share This

 எதிர்வரும் 25ம் திகதிக்கு பின்னரான வார இறுதி நாளில் பயணக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இன்று காலை நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இராணுவ தளபதி இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், அன்றைய தினமே (25) இரவு 11 மணிக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, எதிர்வரும் 28ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

எனினும், இந்த பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தாது, தொடர்ந்து 14 நாட்களுக்கு நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் நேற்று கோரியிருந்தனர்.

கொவிட் தொடர்பான செயலணியின் பரிந்துரைகள் குறித்து தாம் அவதானம் செலுத்துவதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages