சஜித்திடம் திட்டம் கூறுங்கள் - இணைந்து செய்வோம்! நாமல் ராஜபக்ச - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

சஜித்திடம் திட்டம் கூறுங்கள் - இணைந்து செய்வோம்! நாமல் ராஜபக்ச

Share This

 நாட்டில் நிலவும் கோவிட்-19 தொற்று நிலைமையை எதிர்கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் திட்டம் இருந்தால், அதனை முன்வைக்குமாறு அழைப்பதாகவும் அது குறித்து கலந்துரையாடி ஒன்றாக இணைந்து செயற்படுத்த தயாராக இருப்பதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்காங்கே கூறிக்கொண்டு இருக்காமல் வாருங்கள் உட்கார்ந்து பேசலாம் என நாங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

உங்களிடம் திட்டமிருந்தால், நாங்கள் இணைந்து செய்வோம். இது கோவிட் தொற்று. தேர்தல் அல்ல. தேர்தல் காலத்தில் நாங்கள் தேர்தலை செய்வோம்.

நீங்கள் கூறுவது போல் திட்டம் இருந்தால், வாருங்கள் அமர்ந்து பேசி திட்டத்தை அமுல்படுத்த நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். எந்த பிரச்சினையும் இல்லை எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages