தடுப்பூசிகளை செயலிழக்க செய்யும் உருமாறிய கொரோனா! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

தடுப்பூசிகளை செயலிழக்க செய்யும் உருமாறிய கொரோனா! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Share This

 இந்தியாவிலிருந்து 44 நாடுகளுக்கு பரவியதாக கூறப்படும் உருமாறிய கொரோனாவானது தற்போதுள்ள தடுப்பூசிகளையும் செயலிழக்க செய்யும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகெங்கிலும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கொரோனா பரவல் உச்சம் பெற்றள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் நிரந்த தீர்வு என்று நம்பப்படும் நிலையில், தடுப்பூசிகள் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகள் மட்டுமே வழியாக இருக்கும் சூழலில் உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளமையும் அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையில் பரவி வருவது பி1 617 வகை நோய் கிருமி எனவும், உருமாறிய இந்த வைரஸின் வீரியம் மற்றும் பரவும் தன்மை முதல் அலையில் பரவிய வைரஸை விட பல மடங்கு அதிகம் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.   

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages