சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் என்ன? - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் என்ன?

Share This

 இலங்கையில் தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் சீனாவின் சினோபாம் தடுப்பூசி மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் விக் தடுப்பூசி ஆகியவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு சினோபாம் மற்றும் ஸ்புட்னிக் -வி தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்த விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது,

இதில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளையும் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து சினோபார்ம் தடுப்பூசி தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, தடுப்பூசி போடப்பட்டவுடன் வலியை உணருவது மிகவும் பொதுவானது என தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் தலைவலி, காய்ச்சல், சோர்வு, உடல்வலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், குமட்டல், வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், பசியற்ற தன்மை, வாந்தி என்பன சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திய பின்னர் ஏற்படக்கூடிய பொதுவான மற்றும் அரிதான பக்க விளைவுகள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages