கொழும்பு, மோதர பகுதியில் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களிடம் இருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள், 1 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 1 கிலோ கிராம் ஹெஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் 95 இலட்சம் ரூபா பெறுமதியுடையவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் மோதர பொலிஸார் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment