தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய இருவருக்கு சட்ட நடவடிக்கை - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய இருவருக்கு சட்ட நடவடிக்கை

Share This

 வவுனியா சாந்தசோலை பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய இருவர் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த நபரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் நேரடி தொடர்பினை பேணிய அயல் வீட்டை சேர்ந்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். எனினும் அயல்வீட்டினை சேர்ந்த இருவரும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வெளியில் உலாவித்திரிந்ததுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற மேற்பார்வை சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பொலிசாருக்கும் தெரியப்படுத்தினர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் காலம் நிறைவு பெற்றதன் பின்னர் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பணித்தனர்.




No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages