நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

Share This

 அடுத்த வாரம் 3 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18, 19 மற்றும் 20ம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வு நடாத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் பூரண சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடாத்தப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி ஆணைக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages