முகநூலில் பொய்யான தகவல்களைப் பதிவிட்ட அரச அதிகாரி ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
-நுவரெலியா - கொத்மலை பிரதேச நிலப்பிரச்சினைகள் உதவி ஆணையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் முகநூலில் காடழிப்பு தொடர்பான் பல்வேறு புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோண தெரிவித்துள்ளார்.
தனியார் காணிகளை சுத்தம் செய்யும் புகைப்படங்களை எடுத்து இலங்கையின் பிரசித்த பெற்ற காடுகளை அழிப்பது போன்று பதிவிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment