வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி

Share This

 மட்டக்களப்பு - வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பெரியபோரதீவில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 7 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சுகயீனம் காரணமாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குச் சென்றபோது அவருக்கு வைத்தியசாலையில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் போது கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் அவர்கள் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொற்றாளர்கள் தொடர்பு வைத்திருந்ததாக கருத்தப்படும் குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.

அத்தனிமைப் படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 10 பேருக்கு இன்று காலை மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் அதில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக அப்பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages