கொரோனா பரிசோதனைக்கு பயந்து தற்கொலை செய்த நபர்! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

கொரோனா பரிசோதனைக்கு பயந்து தற்கொலை செய்த நபர்!

Share This

 தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள பயந்து கூலித் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்திற்கு அருகில் உள்ள கிராமம் சுப்பா நாயுடு கண்டிகை. அந்த கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). கூலித் தொழிலாளி.

இவருக்கு கடந்த மூன்று தினங்களாக காய்ச்சல் இருந்ததால் அவரது உறவினர்கள் அவரை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதற்கு பயந்த சரவணன், இன்று காலை அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தக்கோலம் பொலிசார் சடலத்தை கைப்பற்றி மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்த சரவணனுக்கு மனைவியும் கலை கல்லூரியில் படிக்கும் மகள் ஒருவரும் உள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.  

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages