பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 11 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
சிறுமியின் உடல் முழுவதும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மூடி இருந்த நிலையில், சிறுமியின் உறவினர்கள், சிறுமிக்கு தொற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்ததாக எண்ணி பயத்தில் யாரும் இறுதி சடங்கிற்கு வரவில்லை.
இதனால் மிகவும் மனவேதனையடைந்த சிறுமியின் தந்தை இறுதியில் தன்னுடைய 11 வயது மகளை தன்னுடைய தோளில் சுமந்தபடியே சுடுகாட்டிற்கு சென்று இறுதிச்சடங்கு செய்துள்ளார்.
இதனையடுத்து, இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குறித்த சிறுமி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment