ஒரு மாதத்திற்குள் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் சிலாபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றை ஒரு மாதத்தில் ஒழிப்பதற்கு , அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர் பதவியை அனைத்து அதிகாரங்களுடனும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.
தவிரவும் வாகனங்கள், பணம் அல்லது வேறு எந்த சலுகைகளும் வசதிகளும் தேவையில்லை.
அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அரசு இயந்திரங்கள், பொது சுகாதார பரிசோதகர்களுடன் சேர்ந்து, தொற்றுநோயைத் தணிக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment