விரைவில் இலங்கையில் அடையாளம் காணப்படும் தொற்றாளர் ஐந்து ஆயிரமாக உயரும்! பேராசிரியர் மனோஜ் வீரசிங்க தகவல் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

விரைவில் இலங்கையில் அடையாளம் காணப்படும் தொற்றாளர் ஐந்து ஆயிரமாக உயரும்! பேராசிரியர் மனோஜ் வீரசிங்க தகவல்

Share This

 இலங்கையில் தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவில் 5 ஆயிரமாக உயரும் என்று கொழும்பு மருத்துவப் பீடத்தின் பேராசிரியர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இலங்கையின் தினமும் அடையாளம் காணப்படும் கோவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையானது மே இறுதியிலும் ஜூன் மாதத்திலும் இரண்டு மடங்காக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கொவிட் 19 வைரஸ் வேகமாக பரவிய பல நாடுகளில் கடும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் மூலமே தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் இது குறித்து சுகாதார துறையினர் அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளனர். அது சம்பந்தமாக இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

தற்போது காணப்படும் நிலைமையில் விரைவில் தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரிக்கும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages