சீன தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க அவசர நடவடிக்கை! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

சீன தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க அவசர நடவடிக்கை!

Share This

 சினோவெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அரசாங்கத்தின் அனுசரணையுடன் விரைவில் உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

அதற்கிணங்க அதுதொடர்பான உடன்படிக்கையொன்றை தயாரித்து கைச்சாத்திடுவதற்கு அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அதிகாரம் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம், சீனாவின் சினோவெக் பயோடெக் நிறுவனம் மற்றும் கெலுப் லைவ் சயன்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்துள்ள

அமைச்சரவை பத்திரத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் நேற்று கூடிய விசேட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages