முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய பேருந்து; ஒருவர் பலி! இருவர் படுகாயம் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய பேருந்து; ஒருவர் பலி! இருவர் படுகாயம்

Share This

 மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி குருக்கள்மடத்தில் முச்சக்கர வண்டியை பேருந்து மோதித்தள்ளியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெரியகல்லாறிலிருந்து மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியை கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருந்த பஸ் மோதி தள்ளியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான அழகப்பர் மதிராஜ் (49) என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவரது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பஸ்சின் சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்    

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages