இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்... 52 பேர் உயிரிழப்பு - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்... 52 பேர் உயிரிழப்பு

Share This

 இந்தியாவில் கருப்பு பூஞ்சை தாக்கத்தினால் 52 பேர் உயிரிழந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலையினால் மக்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கும் இந்த வேலையில்  கருப்பு பூஞ்சை நோயும் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் இந்த மாநிலங்களில் குறைந்துள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சை நோய் தற்போது தீவிரமாகி வருகின்றது.

கொரோனா பரவ தொடங்கியதில் இருந்தே அம்மாநிலத்தில் இதுவரை 52 பேர் கண் மற்றும் மூளை ஏற்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக குஜராத்தில் கொரோனா சிகிச்சையில் குணம் அடைந்தவர்களை மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பங்கஸ் வேகமாக தாக்கியது. குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத் உள்ளிட்ட நகரங்களில் இந்த நோய் வேகமாக பரவி 80 பேர் கருப்பு பங்கஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகினர்.

தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தினால் மக்கள் சிகிச்சைக்கு வழியில்லாமல் உயிரிழந்து வரும் நிலையில், கருப்பு பூஞ்சை நோய் பூதாகரமாக கிளம்பி வருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages