வெசாக் தினத்தை முன்னிட்டு 3 நினைவு முத்திரைகள் வெளியீடு - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

வெசாக் தினத்தை முன்னிட்டு 3 நினைவு முத்திரைகள் வெளியீடு

Share This

 தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இன்று வழங்கப்பட்டது.

இந்த வருட தேசிய வெசாக் தினத்தை வடக்கு மாகாணத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்து.

அதன்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் ஓவியங்கள் இந்த ஆண்டு தேசிய வெசாக் தின நினைவு முத்திரைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா சபுமல்கஸ்கட விகாரை, யாழ்ப்பாணம் கதுறுகொட விகாரை மற்றும் வவுனியா கமடுகந்த தலதா விகாரை ஆகியவற்றை மையமாகக் கொண்டு முத்திரை வடிவமைப்பாளர் பாலித குணசிங்க இந்த நினைவு முத்திரைகளை வடிவமைத்துள்ளார்.

10 ரூபா , 15 ரூபா மற்றும் 45 ரூபா ஆகிய மதிப்பிலான மூன்று முத்திரைகள் இதன்போது வெளியிடப்பட்டன.



No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages