வெளிநாடு செல்ல முற்பட்ட 30 பேரை மடக்கிப்பிடித்த ஸ்ரீலங்கா கடற்படை! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

வெளிநாடு செல்ல முற்பட்ட 30 பேரை மடக்கிப்பிடித்த ஸ்ரீலங்கா கடற்படை!

Share This

 சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 30 பேர் சிலாபத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பிரவேசிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட செல்ல முயற்சித்த 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களுக்கு உறைவிடம் வழங்கி வீட்டு உரிமையாளருடன் சிலாபம் காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய மேலதிக தேடுதல் நடவடிக்கையின் போது இன்று மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 30 ஆண்களும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரால் சிலாபம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages