30 நிமிடத்தில் அடுத்தடுத்து வந்து தாக்கிய 80 ஏவுகணைகள்! நள்ளிரவிலும் கோரத்தாண்டவமாடிய இஸ்ரேல்: 43 குழந்தைகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பலி - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

30 நிமிடத்தில் அடுத்தடுத்து வந்து தாக்கிய 80 ஏவுகணைகள்! நள்ளிரவிலும் கோரத்தாண்டவமாடிய இஸ்ரேல்: 43 குழந்தைகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பலி

Share This

 இஸ்ரேல் 30 நிமிடத்தில் காசாவில் 80 ஏவுகணைகளை விட்டு தாக்குதல் நடத்தியுள்ளதால், இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு காசாவில் 30 நிமிடத்திற்குள் 80 ஏவுகணைகளை விட்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அங்கிருக்கும் அரச கட்டிடங்கள், வீதிகள் மற்றும் குடியிருப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக காசாவில் இருக்கும் முக்கியமான Al-Shifaa மருத்துவமனைக்கு அருகிலும், அதைத் தொடர்ந்து காசாவிற்கு மின்சாரம் கொடுக்கப்படும் பகுதிக்கு அருகேயும் தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த சில நாட்கள் முதல், தற்போது வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 158 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதில் 43 குழந்தைகளும் அடங்கும் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், பலி எண்ணிக்கை இதை எல்லாம் விட அதிகமாவே இருக்கும் என்று கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages