வவுனியாவில் முகக்கவசம் அணியாத 28 பேருக்கு எதிராக முறைப்பாடு பதிவு - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

வவுனியாவில் முகக்கவசம் அணியாத 28 பேருக்கு எதிராக முறைப்பாடு பதிவு

Share This

 வவுனியா நகரில் முகக்கவசம் அணியாது பயணித்தவர்களுக்கு எதிராக இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து எடுத்த நடவடிக்கையில் 28 பேருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 



வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து கோவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் முகக்கவசம் அணியாது பயணித்தவர்கள், முகக்கவசத்தை சீராக அணியாது பயணித்தவர்கள் ஆகியோரை வழிமறித்து அவர்களுக்கு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், பழைய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் பேருந்துகளையும் வழிமறித்து சோதனை மேற்கொண்டதுடன், பேருந்துகளில் முகக்கவசத்தை சீராக அணியாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், முகக்கவசத்தை அணியாமை மற்றும் முகக்கவசத்தை சீராக அணியாமை என்பவை தொடர்பில் 28 பேருக்கு எதிராக முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.




No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages