யாழில் இரகசிய திருமணத்தில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

யாழில் இரகசிய திருமணத்தில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா!

Share This

 யாழ்ப்பாணம்- தையிட்டி பகுதியில் கொரோனா சட்டவிதிமுறைகளை மீறி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 21பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தையிட்டி பகுதியில் இரகசியமான முறையில் குறித்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அது தொடர்பாக அறிந்த சுகாதார பிரிவினர், திருமண நிகழ்வில் பங்குப்பற்றி இருந்த மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட ஏனைய சிலரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினர்.

அதில் சிலருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages