மாதவழிபாட்டு தளத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப்பேச்சுவார்த்தையில் நடைபெற்றது. அதில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு படைகளும் வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் படைகள் திரும்பபெறப்படு வருகின்றன. இதனால், அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்படுவதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தனது தாக்குதலை தலீபான் பயங்கரவாதிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள மத வழிபாட்டு தளத்தில் நேற்று வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த மத வழிபாட்டு தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில், அந்த மதவழிபாட்டு தளத்தில் வழிபாடு செய்ய வந்தவர்கள் மற்றும் தலைமை மதத்தலைவர் உள்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.
மேலும்,15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் உள்பட எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை. இது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment