சட்டத்தை மீறி திருமண வைபவத்தை நடத்திய மணமக்கள் உட்பட 11 பேருக்கு நேர்ந்த பரிதாபம் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

சட்டத்தை மீறி திருமண வைபவத்தை நடத்திய மணமக்கள் உட்பட 11 பேருக்கு நேர்ந்த பரிதாபம்

Share This

சுகாதார சட்டங்களை பின்பற்றாமல் நடத்திய திருமண வைபவத்தில் பங்கேற்ற மணமகன் மற்றும் மணமகள் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து புத்தளம் கொஸ்வத்தை மெதகிரிமிட்டியான கிராம சேவகர் பிரிவு இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தங்கொட்டுவை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மெதகிரிமிட்டியான பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் கடந்த 9 ஆம் திகதி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

அதில் சுகாதார சட்டங்களை மீறி 140 பேர் கலந்துக்கொண்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அதில் கலந்துக்கொண்டவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகளின் படி 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages