11 நாட்களில் 22,952 பேருக்கு கொரோனா! 161 பேர் பலி!! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

11 நாட்களில் 22,952 பேருக்கு கொரோனா! 161 பேர் பலி!!

Share This

 11 நாட்களில் 22,952 பேருக்கு கொரோனா! 161 பேர் பலி!!


மே முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி காலைவரை நாட்டில் 22 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 173 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 90 பெருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 293 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தென்மாகாணத்தில் காலி மாவட்டத்தில் ஆயிரத்து 419 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 496 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 324 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 373 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 38 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில்108 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 45 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 23 பேருக்கும் இக்காலப்பகுதியில் வைரஸ் தொற்றியுள்ளது.

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் 939 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 736 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 651 பேருக்கும் கடந்த 12 நாட்களுக்குள் வைரஸ் பரவியுள்ளது.

அதேவேளை, குருணாகல் மாவட்டத்தில் ஆயிரத்து 26 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 979 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 269 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மே முதலாம் திகதி 9 பேரும், 2ஆம்  திகதி 9 பேரும், 3 ஆம் திகதி 13 பேரும், 5 ஆம் திகதி 14 பேரும், 6 ஆம் திகதி 11 பேரும், 7 ஆம் திகதி 19 பேரும், 8 ஆம் திகதி 22 பேரும், 9 ஆம் திகதி 15 பேரும், 10 ஆம் திகதி 26 பேரும், 11 ஆம் திகதி 23 பேரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Today's Exclusive News Tamil 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages