புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்துனர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல். - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்துனர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்.

Share This

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்துனர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்.

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்துனர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய விடைத்தாள் திருத்துனர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடைத்தாள் திருத்துனர்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்கள இணையத்தளம், DoE திறன்பேசி செயலி மற்றும் onlineexmas.gov.lk/eic ஆகிய ஏதேனும் ஒரு முறையின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் அல்லாத விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை பதிவுத் தபாலிலும் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TODAYS EXCLUSIVE NEWS TAMIL

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages